உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேற்பார்வையின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் சுற்றுலா விடுதியொன்றை தங்களது விடுமுறைகளை கழிப்பதற்க்காக அல்லது நடமாடும் வேலை தொடர்பான பயணங்களின் இருப்பிடமாக தேர்ந்துகொண்டமைக்காக நாங்கள் முதலில் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இச் சுற்றுலா விடுதியில் இருக்கும் அனைத்து வசதிகளும் குறைந்த பட்ச நலன்புரி விலையில் தங்களுக்கு வழங்கப்படுவதுடன் சுற்றுலா விடுதியின் முறையான பராமரிப்பிற்காக அரசாங்கம் வருடாந்தம் பெருந் தொகை பணத்தை செலவு செய்கின்றது.

இச் சுற்றுலா விடுதியும் அதனுடன் தொடர்பான தளபாடங்கள், உபகரணங்கள் மற்றும் தோட்டம் போன்றவை பொதுச் சொத்துக்களாவதோடு இச் சொத்துக்களை முறையாக பேணுவதற்கு தங்களாலும் வசிக்கும் ஏனையவர்களாலும் வழங்கப்படும் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது.

சுற்றுலா விடுதியை பயன்படுத்தும் போது கீழ்வரும் விடயங்களிற்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களது விசேட கவனத்தை செலுத்துமாறு எதிர்பார்க்கின்றோம்.

 • சுற்றுலா விடுதியில் தங்குவதற்கான விண்ணப்பத்தில் பெயர் குறிப்பிடாத வெளியாட்களை அழைத்து வருதல் தவிர்க்கப்பட வேண்டும்.
 • சுற்றுலா விடுதியின் சுத்தமும் பாதுகாப்பும் தங்களது பொறுப்பாகும்.
 • தங்கியிருக்கும் வேறு நபர்களுக்கும் அயலவர்களுக்கும் இடையூறு விளைவிக்காதவாறு இருத்தல் வேண்டும்.
 • மதுபான பாவனையை முற்றிலும் தவிர்த்தல்.
 • தங்கியிருப்பவர்கள் இரவு 10 மணிக்கு முன் சுற்றுலா விடுதிக்கு வருகைதந்து உரிய நேரத்தில் திறப்புக்களை கையளிக்க வேண்டும்.
 • பராமரிப்பாளரிடமிருந்து பெற்றுக்கொண்ட சேவைகளுக்காக முறையாக கட்டணங்களை செலுத்துதல் வேண்டும்.
 • அரச சேவையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் வசதிகளை பயன்படுத்தல்.
 • எந்த விடயமும் சி​நேகபூர்வமாகவும் உடன்பாட்டு ரீதியிலும் தீர்க்கப்படுதல் வேண்டும்.
 • சுற்றுலா விடுதிகளின் தரத்தை உயர்த்துவதற்கு பங்களிப்பை வழங்குதல்.

சுற்றுலா முன்பதிவு விண்ணப்பம்

சுற்றுலா விடுதிக்கட்டணம்

Contact Details For circuit bungalows Keepers

பராமரிப்பாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டும் சேவை வசதிகள் மற்றும் சராசரி விலைகள்

மெத்தை விரிப்புகள் மற்றும் துவாலைகள் போன்றவற்றின் விலைப்பட்டியல். (விலை மாற்றங்களுக்கு உட்பட்டது)

சிறிய படுக்கை விரிப்புக்கள் ரூ. 50.00
இரட்டை படுக்கை விரிப்புக்கள் ரூ. 50.00
தலையணை உறை ரூ. 20.00
போர்வைகள் ரூ. 50.00
துவாய்கள் ரூ. 25.00 
   

குறிப்பு:- இத் துணிகளை நல்ல நிலையிலும் தூய்மையான நிலையிலும் வழங்குவது பராமரிப்பாளரின் கடமையாகும். ஆகவே இத் துணிகள் தூய்மையற்றும் பாவனைக்கு உகந்ததற்றும் காணப்படின் அவற்றை பயன்படுத்துவதற்கு முன் அவை குறித்து பராமரிப்பாளரிடம் தெரிவித்து நல்ல துணிகளை பெற்றுக்கொள்வது தங்களது கடமையாகும்.

தாங்களும் தங்களுடன் தங்கியிருக்கும் குழுவும் உணவுப் பண்டங்ளை பராமரிப்பாளரிடம் இருந்து பெற்றுக்கொள்ள விரும்பினால், அவரிடம் இருக்கும் உணவுப் பட்டியலில் இருந்து தங்களுக்குத் தேவையான உணவு வகைகளை 3 மணித்தியாலத்திற்கு முன் தெரியப்படுத்துதல் வேண்டும். உரிய சுற்றுலா விடுதியில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உணவுப் பட்டியல் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இவை சந்தையில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொதுவான உணவு வகைகளின் பட்டியல் ஆக உள்ளதோடு சந்தையில் இருந்து பெறக்கூடிய வசதிகளுக்கேற்ப இவற்றின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படும். தங்களின் கோரிக்கைகளிற்கேற்ப பராமரிப்பாளரினால் தயாரிக்கப்படும் உணவு வகைகளைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன் அவற்றின் விலைகளைப் பற்றி முன்கூட்டியே கலந்தரையாடுவது பொருத்தமானதாகும்.

தேவையான உணவு வகைகளை வழங்குவதன் மூலமும் அதற்கான கட்டணங்களைச் செலுத்துவதன் மூலமும் தங்களின் உணவுத் தேவை நிறைவேற்றப்படும்.

தங்களது அடுத்த விடுமுறையை திட்டமிடுவதற்காக உள்நாட்டலுவல்கள் பிரிவின் கீழ் நிர்வகிக்கப்படும் சுற்றுலா விடுதிகளின் விபரங்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

உணவு

வழங்கக்கூடிய பொதுவான உணவு வகைகள்

ஒரு நபருக்கான உணவின் விலை(ரூபா)

காலை உணவு
 • பாற்சோறு(3 துண்டு) / கட்டசம்பல்
 • பாற்சோறு(3 துண்டு) / கட்டசம்பல் / தக்காளிக்கறி
 • பாற்சோறு( 3 துண்டு) / கட்டசம்பல்ஃதக்காளிக்கறி / மீன் (தூணா / கெளவல் / சல்மன்)
 • இடியப்பம் (15) / தேங்காய்ச்சம்பல் / பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி
 • இடியப்பம் (15) / தேங்காய்ச்சம்பல் / பருப்பு அல்லது கிழங்குக்கறி / முட்டைக்கறி
 • சோறு / தேங்காய்ச்சம்பல் / பருப்புக்கறி
 • சோறு / தேங்காய்ச்சம்பல் / பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி / கருவாடு
 • சோறு / தேங்காய்ச்சம்பல் / பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி / முட்டைக்கறி
 • பாண் (1/2) தேங்காய்ச்சம்பல் / பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி
 • 100
 • 110
 • 140
 • 130
 • 150
 • 90
 • 130
 • 130
 • 110
மதிய உணவு / இரவு உணவு
 • சோறு / பருப்பு / மரக்கறி / சுண்டல் / சலாது / பப்படம்
 • சோறு / பருப்பு / மரக்கறி / சுண்டல் / சலாது / பப்படம் / மீன்கறி
 • சோறு / பருப்பு / மரக்கறி / சுண்டல் / சலாதுச்சம்பல் / பப்படம் / கோழிக்கறி
 • பிரைட் ரைஸ்(சம்பா) பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி  / மிளகாய் பேஸ்ட்
 • பிரைட் ரைஸ்(சம்பா) பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி  / மிளகாய் பேஸ்ட் / மீன் வறுவல்
 • பிரைட் ரைஸ்(சம்பா) பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி / மிளகாய் பேஸ்ட் / கோழி வறுவல்
 • பிரைட் ரைஸ்(சம்பா) கோழிக்கறி / மிளகாய் பேஸ்ட்  / சோப்சி
 • பிரைட் ரைஸ்(சம்பா) கோழிவறுவல் / மிளகாய் பேஸ்ட் / சோப்சி
 • முட்டை பிரைட் ரைஸ் பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி / மிளகாய் பேஸ்ட்
 • பிரைட் ரைஸ் / சோஸ் / மிளகாய் பேஸ்ட்
 • 120
 • 180
 • 180
 • 150
 • 220
 • 220
 • 210
 • 230
 • 180
 • 220
இரவு உணவு
 • இடியப்பம் / தேங்காய்ச்சம்பல் / பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி
 • இடியப்பம் / தேங்காய்ச்சம்பல் / பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி / முட்டைக்கறி
 • மரக்கறி நூடில்ஸ் / பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி / மிளகாய் பேஸ்ட்
 • மரக்கறி நூடில்ஸ் / பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி / கோழிக்கறி
 • மரக்கறி நூடில்ஸ் / பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி / மிளகாய் பேஸ்ட் / கோழிக்கறி
 • மரக்கறி நூடில்ஸ் / பருப்புக்கறி அல்லது கிழங்குக்கறி / மிளகாய் பேஸ்ட் / மீன்கறி
 • 130
 • 150
 • 100
 • 150
 • 160
 • 160
குடி பானம் 
 • தேநீர்
 • பால் தேநீர் / பால் கோப்பி
 • மைலோ / நெஸ்டமோல்ட
 • 15
 • 40
 • 45
இனிப்பு வகை
(கட்டுப்பாட்டு ,நியமித்த விலை)
 • பனிக் கூழ் (ஐஸ் கிரீம் )
 • யோகட்
 • யோகட் மற்றும் கித்துள் பாணி
 • தயிர் / கித்துள் பாணி
 • 50
 • 40
 • 35
 • 50

உங்களுக்கான உணவை சுற்றுலா விடுதியில் இருந்து பெறுவதாயின் விடுதிக்கு வருவதற்கு முன்னர் விடுதிப் பராமரிப்பாளருடன் தொடர்பு கொண்டு முற்கூட்டியே அறிவிக்க வேண்டும்.

FaLang translation system by Faboba