தகவலை அணுகுவதற்கான நடைமுறை
சட்டம்- தகவல் அறியும் உரிமை சட்ட இலக்கம் 12 of 2016
கட்டளை வர்த்தமானி - வர்த்தமானி அறிக்கை No. 2004/66 dated 3rd February 2017
பகிரங்க அதிகாரசபை – உள்நாட்டலுவல்கள் அமைச்சும் மற்றும் அத்துடன் இணைந்த நிறுவனங்களும்
மேலே கூறப்பட்ட சட்டத்தின் கீழ் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தொடர்பாக தகவல் பெறும் பொருட்டு விண்ணப்பப்படிவத்தை RTI1 பயன்படுத்தி விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அலுவலரிடம் தகவல் பெற முடியும். இந்த விண்ணப்பத்தின் சமர்ப்பிப்பு கட்டாயமில்லை.
தகவல் அலுவலர்
![]() |
திரு.கே.ஜி. விஜேசிறி தொலைபேசி :+94 112 050 320 |
தகவலறிவதற்காக விண்ணப்பித்தல்
- தகவலறிவதற்காக எழுத்துமூலம் RTI 01 எனும் விண்ணப்பப் படிவத்தினை அல்லது வாய்மொழி மூலமான வேண்டுகோள் ஒன்றை தகவல் அலுவலரிடம் விடுத்து, அது கிடைத்தமைக்கான கடிதம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளவும்.
- தங்களது கோரிக்கைக்கு உரிய தகவல்களை வழங்க முடியுமா என்பது பற்றி கூடிய விரைவில், எவ்வாறாயினும் 14 நாட்களுக்குள் அறிவிக்கப்படும்.
- வேண்டப்படும் தகவல்களை தங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்படும் பட்சத்தில், ஆணைக்குழுவினால் விதிக்கப்படும் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருப்பின் அது பற்றி தங்களுக்கு அறிவிக்கப்படும். தகவல்களைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின் அதற்கமைவான கட்டணத்தைச் செலுத்தி அல்லது கட்டணம் செலுத்த வேண்டியிராவிடின் கட்டணமின்றி தங்களுக்கு 14 நாட்களுக்குள் தகவல்கள் வழங்கப்படும்.
- கட்டணம் செலுத்திய பின்னர் 14 நாட்களுக்குள் தகவல்களை வழங்குவதில் அசௌகரியம் ஏதும் ஏற்படும் பட்சத்தில், அக்கால எல்லையை நீடிப்பதற்கு அவசியமான காரணங்களை குறிப்பிட்டு 21 நாட்களை விட அதிகரிக்கா மேலதிக காலஎல்லையினுள் தாங்கள் கோரிய தகவல்கள் தங்களுக்கு வழங்கப்படும்.
- தகவல்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பான வேண்டுகோள் ஏதேனும் பிரசையின் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் சம்பந்தமாக எனில், அவ்வாறான கோரிக்கைகள் தொடர்பாக 48 மணிநேரத்தினுள் பதிலளிக்கப்படும்.
- தகவல்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பான வேண்டுகோளுக்கு ஏற்ப,
- தகவலுக்கான கோரிக்கையை மறுப்பது
- பிரிவு 5 இன் கீழ் தகவல்கள் விலக்கு அளிக்கப்படுகின்றன என்ற அடிப்படையில் அத்தகைய தகவல்களை வழங்கப்படுவதிலிருந்து மறுப்பு தெரிவித்தல்
- இந்தச் சட்டத்தால் குறிப்பிடப்பட்ட கால அளவுகளுடன் இணங்காதது
- முழுமையற்ற அல்லது தவறான தவறான தகவல்களை வழங்குதல்
- அதிக கட்டணம் வசூலித்தல்
- கோரப்பட்ட படிவத்தில் தகவல்களை வழங்க தகவல் அதிகாரியின் மறுப்பு
- தகவல் சிதைக்கப்பட்டஇ அழிக்கப்பட்ட அல்லது தவறாக இடம்பிடித்ததாக நம்புவதற்கு நியாயமான காரணங்களைக் கோரும் குடிமகனுக்கு அத்தகைய தகவல்களை அணுகுவதைத் தடுத்தல்
இது தொடர்பாக அதிருப்தியடையும் பட்சத்தில், கீழே பெயர் குறிப்பிடப்பட்ட அலுவலருக்கு 14 நாட்களுக்குள் மேன்முறையீடொன்றை சமர்ப்பிக்க முடியும்
தகவல் அலுவலர்
![]() |
ஜெனரல் ஜி.டி.எச். கமல் குணரத்ன (ஓய்வு) தொலைபேசி :+94 112 050 310 |
தகவலறியும் விண்ணப்ப படிவங்கள்
- தகவல் பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும் - நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு மேல்முறையீடு
விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்