71வது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (04) முற்பகல் கொழும்பு காலி முகத்திடலில் மிக கோலாகலமாக நடைபெற்றது.
மாலைத்தீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி நிகழ்வின் பிரதான அதிதியாக கலந்துகொண்டதுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.